Map Graph

இந்துஸ்தான் காபி ஹவுஸ்

ஐக்கிய இராச்சியத்தில் தொடங்கப்பட்ட முதல் இந்திய உணவகம்

இந்துஸ்தான் காபி ஹவுஸ் 1810-ஆம் ஆண்டில் இலண்டனிலுள்ள 34, ஜோர்ஜ் தெருவில் திறக்கப்பட்ட ஓர் இந்திய உணவகமாகும். பிரித்தானியத் தீவுகளில் திறக்கப்பட்ட முதல் இந்திய உணவகம் இதுவாகும். இந்த உணவகத்தினை பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் வங்காள பிரிவின் முன்னாள் படைத்தலைவர் சேக் தீன் முகமது நிறுவவினார். 1812-ஆம் ஆண்டில் சேக் தீன் முகமதுவின் திவாலா நிலையால் உணவகம் மூடப்பட்டது. இந்நிறுவனம் செயல்பட்ட இடத்தில் செப்டம்பர் 2005-இல் வெசுடுட்மின்ஸ்டர் நகரத்தின் சார்பில் நினைவு தகடு ஒன்று வைக்கப்பட்டுள்ளது.

Read article
படிமம்:Hindoostane_Coffee_House_(7599806070).jpg